Wednesday, June 14, 2017

மீண்டும் ஒரு ஹாலிவுட் படம் : தீபிகா குஷி


மீண்டும் ஒரு ஹாலிவுட் படம் : தீபிகா குஷி



14 ஜூன், 2017 - 14:25 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட்டில் நம்பர்-1 நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, சமீபத்தில் ஹாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். ஹாலிவுட் நடிகர் வின் டீசல் உடன் அவர் நடித்த "XXX Return of Xander Cage" என்ற படம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார் தீபிகா. அது டிரிபிள் எக்ஸ் 4 படம் தான்.

இதுப்பற்றி XXX படத்தின் இயக்குநர் டிஜே.கார்சா கூறியிருப்பதாவது... "XXX-4ம் பாகம் உருவாக இருக்கிறது. XXX டீம் அப்படியே நடிக்கிறது. தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படம் தொடர்பாக அடுத்தவாரம் அனைத்து நடிகர்களும் சந்திக்க உள்ளனர். அப்போது படம் பற்றி முழுமையாக விவாதிக்கப்படும் என்றார்".

தனக்கு மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் தீபிகா படுகோனே.


0 comments:

Post a Comment