ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் அடுத்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதனையடுத்து, பா. ரஞ்சித் இயக்கி வரும் காலா படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.
இதன் சூட்டிங் தற்போது மும்பையில் நடந்து வருகிறது.
தனுஷ் தயாரித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இது ரஜினிகாந்தின் 164வது படம் என இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் தெரிவித்து இருந்தார்.
இதுவே ரஜினிகாந்த் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
இப்படத்தை முடித்துவிட்டு அரசியலில் தீவிர கவனம் செலுத்த போகிறாராம் சூப்பர் ஸ்டார்.
வருகிற 2021ஆம் ஆண்டு தேர்தலை குறி வைத்து அவரது நடவடிக்கைகள் இருக்கும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
ரஜினிக்கு ஆதரவாக ஆனந்த்ராஜ், ஜீவா உள்ளிட்ட நடிகர்கள் களம் இறங்குவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
Whether Rajinis 164th movie Kaala will be his last movie?
0 comments:
Post a Comment