ஷாரூக்கான் இறந்து விட்டாரா? அதிர்ச்சி கொடுத்த டிவி சேனல்
04 ஜூன், 2017 - 10:05 IST
இந்தி சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஷாரூக்கானும் ஒருவர். இவருக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், பாரிஸ் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விமான விபத்தில் ஷாரூக்கான் இறந்து விட்டதாக ஐரோப்பாவில் உள்ள டிவி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஷாருக்கானின் நண்பர்களும், ரசிகர்களும் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், அந்த செய்தியில் துளியும் உண்மையில்லையாம். அதையடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில், நான் எந்த விபத்திலும் சிக்கவில்லை. நலமுடன் இருக்கிறேன். இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று பதிவிட்டிருக்கிறார் ஷாரூக்கான். இதையடுத்து பல்வேறு நாடுகளிலும் உள்ள ஷாரூக் கானின் ரசிகர்கள் அந்த டிவி சேனலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
0 comments:
Post a Comment