“மனதாலும் அழகானவர் அனுஷ்கா” ; உன்னிமுகுந்தன் பரவசம்..!
03 ஜூன், 2017 - 15:47 IST
ஒருவகையில் நயன்தாரா போலத்தான் அனுஷ்காவும். கதையும் தனது கதாபாத்திரமும் பிடித்துவிட்டால் ஹீரோ யார் என்கிற பேச்சை எடுப்பதில்லை. அனுஷ்காவின் இந்த முடிவுதான் மலையாள திரையுலகில் இரண்டாம் நிலை நடிகராக, வளரும் நடிகர் பட்டியலில் இருக்கும் உன்னி முகுந்தனுக்கு தெலுங்கில் உருவாகி வரும் 'பாக்மதி' படத்தில் அனுஷ்காவுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது என்றே சொல்லலாம்... அனுஷ்காவுடன் ஜோடிசேரும் முதல் மலையாள நடிகரும் இவர்தான் என்கிற பெயரையும் அவருக்கு பெற்று தந்துள்ளது.. இத்தனைக்கும் இந்தப்படத்தில் ஆதி மற்றும் ஜெயராம் இருவரும் கூட முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
யூவி கிரியேஷன் தயாரிப்பில் இயக்குநர் ஜி.அசோக் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் உன்னி முகுந்தன் தனது வேலையை முடித்துக்கொடுத்துவிட்டார். அப்படியே அனுஷ்காவுடன் நடித்த நாட்களையும் அனுபவத்தையும் நெகிழ்ச்சியாக தனது பேஸ்புக் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார் உன்னி முகுந்தன். “அழகுப்பெண் அனுஷ்காவுடன் நடித்ததில் வெகு சந்தோசம்.. அழகு என்பது வெறும் தோலின் நிறத்தினால் மட்டுமல்ல.. உள்ளத்தாலும் அனுஷ்கா அழகானவர்தான்.. அவரைப்பற்றி நிறைய பேசுவதற்கு எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை” என கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.
கடந்த வருடம் மோகன்லாலுடன் இணைந்து தெலுங்கில் வெளியான 'ஜனதா கேரேஜ்' படத்தில் உன்னிமுகுந்தன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment