Saturday, June 3, 2017

எனக்காக சல்மானை விட்டு விலகுங்கள் - கத்ரீனா


எனக்காக சல்மானை விட்டு விலகுங்கள் - கத்ரீனா



03 ஜூன், 2017 - 17:04 IST






எழுத்தின் அளவு:








ரன்பீர் கபூர் உடனான காதல் முறிவுக்கு பிறகு சல்மான் உடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார் கத்ரீனா கைப். ஏற்கனவே ஏக்தா டைகர் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹே படத்தில் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் ஐப்பா விருது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சல்மான், கத்ரீனா ஆகியோருடன் ஆலியா பட்டும் கலந்து கொண்டார்.

அப்போது ஆலியாவிடத்தில் எப்போது சல்மான் உடன் இணைந்து நடிக்க போகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு ஆலியா, எப்போது நடக்கும் என்று தெரியவில்லை, ஆனால் விரைவில் நடக்கும் என நினைக்கிறேன் என்றார். அதற்கு அடுத்து பேசிய கத்ரீனாவோ, "எனக்காக சல்மான் மற்றும் வருண் தவான் விட்டு விலகுங்கள் ஆலியா" என்று கேட்டு கொண்டார்.

கத்ரீனா சும்மா விளையாட்டுக்காக அப்படி கூறினாரா.... இல்லை சல்மான் மீதுள்ள ஈர்ப்பினால் அப்படி கூறினாரா...? என ஒரு விவாதம் போய் கொண்டிருக்கிறது.


0 comments:

Post a Comment