
34 View | Published by: Rajesh G on June 3, 2017

நடிகர்கள் : வேலு பிரபாகரன், பொன் ஸ்வாதி, சந்துரு, ரகுநாத், ஜெகா, சுரேஷ், ரம்யா, அகில் மற்றும் பலர்.
இயக்கம் : வேலு பிரபாகரன்
இசை : இளையராஜா
ஒளிப்பதிவாளர் : மணிவண்ணன்
எடிட்டர்: கேஸ்ட்ரோ
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு : பி. சுரேஷ் கிருஷ்ணா

கதைக்களம்…
ஒரு இயக்குனரின் காதல் டைரி என்று படத்தின் தலைப்பை பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும். என்ன இதில் ஒரு சேஞ்ச் என்றால் ஒரு இயக்குனரின் காதல் டைரி என்று வைக்காமல் காமம் கலந்த காதல் டைரி என்று வைத்திருக்கலாம். (காமம் கலந்துதானே காதல் என விளக்கமும் படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்..)
தன்னுடைய குழந்தை பருவம், இளமை பருவம், முதுமை பருவம் என மூன்றையும் கலந்து சொல்லியிருக்கிறார் வேலு பிரபாகரன்.
அதில் காதல், காமம், நடிகை, அவளது உணர்ச்சி, அவளது உணர்வு, நடிப்பு, நாட்டியம் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார்.

கேரக்டர்கள்…
குழந்தை பருவம், இளமை பருவம் என சிறிய சிறிய கேரக்டர்களில் பலர் இருந்தாலும் வேலுபிரபாகரன் மட்டுமே படத்தில் தெரிகிறார். மன்னிக்கவும் அவருடன் பொன் ஸ்வாதியும் நன்றாகவே தெரிகிறார்.
ஒவ்வொரு பருவத்திற்கும் சில நாயகிகளை பயன்படுத்தியிருந்தாலும், ஸ்வாதி மட்டுமே ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.
படத்தில் கதை என்பதை விட சதை மட்டுமே இருக்கிறது என்பதால் கதை பற்றி சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் வேலு பிரபாகரன் உரக்கச் சொல்லியிருக்கிறார்.

ஒரு 10 வயது பையன், அவனின் பெற்றோர் முத்தமிடுவதை பார்த்துவிடுகிறான்.
அவனின் பார்வையில் அது தப்பாக தோன்றுகிறது. அதுபோல் அவனின் பெற்றோரும் குற்றச் உணர்ச்சியில் அவனை பார்க்க தயங்குகின்றனர்.
அயல் நாடுகளில் திருமணத்தின் போது மக்கள் மத்தியில் மணமக்கள் முத்தமிட்டு கொள்கின்றனர்.
அங்கே அது சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால் இங்கே பெண்களை மறைத்து மறைத்து வாழ வைக்கின்றனர்.
எனவே மூடி மறைக்கப்பட்ட சேலையில் சதை தெரியாதா? என ஆண்கள் ஏங்குகின்றனர். இதனால் பாலியல் பலாத்காரம் நடக்கிறது.
பொத்தி பொத்தி வைப்பதால், ஆர்வம் ஆசை அதிகமாகி அந்த காமம் தலைக்கேறி விடுகிறது.
ஐ லவ் யூ ன்னு ஒருத்தன் சொன்னாலே நான் உன்னுடன் உடலுறவு கொள்ள சம்மதிக்கிறேன். உனக்கு சம்மதமா? என்று அர்த்தம் என கூறுகிறார்.
காதல் என்பது தனியாக இல்லை. அது காமம் கலந்த கலவை என பாடமும் நடத்தியிருக்கிறார்.

எனவே பாலியல் மற்றும் செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு தேவை. பள்ளிகளில் செக்ஸ் விழிப்புணர்வு கல்வி வேண்டும் என சொல்லி முடிக்கிறார்.
அத்துடன் பெண்கள் மீதுள்ள மோகத்தால், இப்படி வழிமாறியது என பயணம். என அவரது காம லீலைகளை அரங்கேற்றமும் செய்துவிடுகிறார்.
பெரும்பாலானவர்களின் மனதில் காம ஆசை இருக்கிறது. அவர்கள் சமுதாயத்திற்காக மூடி மறைத்து நடித்துக் கொண்டு இருக்கின்றனர்.
மேலும் காம கலைகள் அதனை சார்ந்ந ஓவியங்கள் என அனைத்தையும் கலந்து தந்திருக்கிறார்.
இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
முக்கியமாக மணிவண்ணனின் ஒளிப்பதிவு படத்தை மேலும் ரசிக்க வைக்கிறது. (ஹி…ஹி…ஹீ..)
ஒரு இயக்குனரின் காதல் டைரி… பிடித்தவர்கள் பிரித்து படிக்கலாம்
Tags:
Oru Iyakkunarin Kadhal Diary movie stills, Oru Iyakkunarin Kadhal Diary rating, Oru Iyakkunarin Kadhal Diary review, Oru Iyakkunarin Kadhal Diary review rating, Oru Iyakkunarin Kadhal Diary Velu Prabhakar, Velu prabakar marriage, அகில், ஒரு இயக்குனரின் காதல் டைரி விமர்சனம், காதல் கதை வேலு பிரபாகரன், சந்துரு, சுரேஷ், ஜெகா, பொன் ஸ்வாதி, ரகுநாத், ரம்யா, வேலு பிரபாகரன், வேலு பிரபாகரன் திருமணம்
0 comments:
Post a Comment