ஓம் பிரகாசின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்
04 ஜூன், 2017 - 15:14 IST
டைரக்டர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒப்பந்தமாகி உள்ளாராம். இப்படத்திற்கு பேன்னி கான் என பெயரிடப்பட்டுள்ளது. முதலில் இப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் இப்படத்தில் தற்போது ஐஸ்வர்யா ராய் தான் நடிக்கிறார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாடகராக பல போராட்டங்களை சந்திக்கும் ஒருவர், தனது மகளை இசை உலகில் மிகப் பெரிய ஆளாக்க நினைக்கிறார். அவர் தனது விருப்பத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதே பேன்னி கான் படத்தின் கதையாம். இப்படத்தில் நடிகர் அனில் கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இப்படத்தின் தயாரிப்பாளரும் அனில் கபூர் தானாம்.
0 comments:
Post a Comment