Sunday, June 4, 2017

சினிமா நடிகையான தொகுப்பாளினி லஸ்யா


சினிமா நடிகையான தொகுப்பாளினி லஸ்யா



04 ஜூன், 2017 - 10:25 IST






எழுத்தின் அளவு:








தெலுங்கில் ஜெமினி, மா மியூசிக் போன்ற சேனல்களில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்தவர் லஸ்யா. லைவ் ஷோ, சமையல், சினிமா நிகழ்ச்சிகள் பங்கேற்று வந்த லஸ்யா, தற்போது ராஜா மீரு கிகா -என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தில் ரேவந்த் நாயகனாக நடித்துள்ளார்.

சின்னத்திரையில் பிரபலமாக திகழுந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்களாம். அந்த பாப்புலாரிட்டியை கருத்தில் கொண்டுதான் ராஜா மீரு கிகாபடத்தில் நடிக்க லஸ்யாவுக்கு சான்ஸ் கிடைத்ததாம். இப்படத்தில் இஞ்சினியரிங் படித்த நாயகி வேடத்தில் நடித்துள்ள அவர், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதைத் தொடர்ந்து மேலும் சில படவாய்ப்புகளும் லஸ்யாவுக்கு கிடைக்கும் நிலை உள்ளதாம். இந்த நிலையில், தொடர்ந்து ஹோம்லியான வேடங்களில் மட்டுமே நடிப்பேன். எந்த காரணம் கொண்டும் எனது இமேஜை கெடுக்கும் வகையில் கிளாமர் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று பேட்டியில் தெரிவித்துள்ளார் லஸ்யா.


0 comments:

Post a Comment