135 View | Published by: Rajesh G on June 2, 2017
நடிகர்கள் : ஹரிஷ், அர்ஜீனா, யாமினி பாஸ்கர், சித்தாரா, பாவெல், ஷிஜாய் வர்கீஸ் மற்றும் பலர்.
இயக்கம் : எஸ்பிடிஏ குமார்
இசை : பிரபு ஷங்கர்
ஒளிப்பதிவாளர் : வினோத் ரத்னசாமி,
எடிட்டர்: சுதா
பி.ஆர்.ஓ. : ஜான்
தயாரிப்பு : ஸ்வஸ்திக் நிறுவனம்
கதைக்களம்…
ஒரு விபத்தில் இருந்து வில்லன் அர்ஜுனாவை காப்பாற்றுகிறார் ஹீரோ ஹரிஷ்.
இதனால் அவரை தன் தம்பி போல பார்த்துக் கொள்கிறார் அர்ஜுனா. (இதனால் இவரது மனைவி சுஜா வருணியின் தம்பி பாவலுக்கு கோபம் என்பது தனி ட்ராக்)
தன் அம்மா சித்தாரா தன்னைவிட தன் தம்பியின் மேல் பாசமாக இருப்பதால், அதனை வெறுக்கும் ஹரிஷ், வில்லன் உடன் இருப்பதையே விரும்புகிறார்.
ஒரு சூழ்நிலையில், தன் தம்பிக்கு இருக்கும் நோய் பற்றி இவருக்கு தெரிய வர, குடும்பத்துடன் ஒன்ற நினைத்து, வில்லனிடம் இருந்து விலக நினைக்கிறார்.
இதனால் வில்லனுக்கும் இவருக்கும் மோதல் வருகிறது.
இதே நேரத்தில் இந்த கும்பலை என் கவுண்டர் செய்ய காத்திருக்கிறார் ஏசிபி ஷிஜாய் வர்கீஸ்.
திருந்த நினைக்கும் ஹரிஷ் முழுமையாக திருந்தினாரா? அல்லது வில்லனால் தீர்த்துக் கட்டப்பட்டாரா? என்கௌண்டர் செய்யப்பட்டாரா? என பல திருப்பங்களுக்கு விடை சொல்லும் விதமாக முடிகிறது இந்த முன்னோடி.
கேரக்டர்கள்…
அறிமுக நாயகன் ஹரிஷுக்கு இதை விட ஒரு பவர்புல் கேரக்டரை எந்த இயக்குனரும் தரமுடியாது எனலாம். முதல் படத்திலேயே ஆக்ஷன், பாசம், காதல், நட்பு என அனைத்தையும் மிக்ஸ் செய்துள்ள ஒரு கேரக்டர். நடிப்பிலும் பெரிதாக குறையில்லை.
வெறுமனே நாயகியாக இல்லாமல் கதைக்கு உதவும் நாயகியாக நடித்துள்ளார் யாமினி பாஸ்கர்.
கங்காரு படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜீனா இதில் வில்லன். இவர் செகன்ட் ஹீரோ என்பது போல அதிகம் ஸ்கோர் செய்துள்ளார்.
அதிலும் குப்பைத் தொட்டி உள்ளே இருந்துக் கொண்டு அர்ஜீனா மோதும் காட்சிகள் அனல் தெறிக்கும்.
ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி நிஜமாலுமே டேஞ்சர்தான் போல.
அர்ஜீனாவும் ஹரிஷும் போலீஸ் ஸ்டேஷன் செல்லும் காட்சி தளபதி படத்தை நினைவுப்படுத்தும். (பின்னணி இசை கூட அதுபோலவே தோன்றும்)
ஏ.சி.பி சௌந்திரபாண்டியனாக மலையாள நடிகர் ஷிஜாய் வர்கீஸ். 3வது ஹீரோவாக தென்படுகிறார். மலையாள பாஷை என்றாலும் நடிப்பில் மகிழ்ச்சி தருகிறார்.
நெல்லை தமிழ் பேசி மிரட்டி தன் கேரக்டரை பளிச்சிட செய்துள்ளார் பாவல்.
இவர்களுடன் சுஜா வாருணி, அம்மா சித்தாரா, தம்பி கேரக்டர் மற்றும் நண்பர்கள் ஓகே.
தொழில்நுட்ப கேரக்டர்கள்…
வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவும், பிரபு சங்கரின் இசையும் படத்திற்கு ப்ளஸ்.
பிரபுசங்கரின் இசையில் முட்டகறி பாடல் அதிரடி ஆட்டம்.
அக்கம் பக்கம் பாடலில் ஆட்டத்தை பார்ப்பதா? கிராபிக்ஸை பார்ப்பதா? என படத்தை இன்னொரு முறை பார்க்க செய்துவிடுவார் டைரக்டர்.
காதல் காட்சிகள் மற்றும் நட்பு காட்சிகள் படத்தின் வேகத்தை குறைக்கிறது. எடிட்டர் சுதா கொஞ்சம் உஷாராக இருந்திருக்கலாம். (இப்போது கூட வெட்டினாலும் படத்திற்கு பலம்தான்)
செம்பட்டை என்ற ஒரு கேரக்டரை கூலிப்படை கொலை செய்யும் காட்சிகள் மிரட்டல். (ஆனால் இதை கொலைக்காரர்கள் கற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும்)
இயக்கம் பற்றிய அலசல்…
வெறும் கொலை, பழிவாங்கல் என்றில்லாமல், குடும்ப பாசத்தையும் தந்துள்ள எஸ்.பி.டி.ஏ.குமாரை பாராட்டலாம்.
எவரிடமும் உதவி இயக்குனாராக வேலை செய்யாமல், படத்தை ரசிக்கும் வகையில் கொடுத்திருப்பது ஆச்சரியம்தான்.
கதை மீதும் தன் மீதும் நம்பிக்கை வைத்து களம் இறங்கியுள்ளார் எஸ்பிடிஏ குமார். அறிமுக படமே அவருக்கு அப்ளாஸை அள்ளிக் கொடுக்கும்.
குற்றம் செய்பவர்கள் எவ்ளவோ பேர் வெளியில் இருக்க, திருந்த நினைக்கும் ஒரு குற்றவாளி நன்றாக இருந்துட்டு போகட்டும் என்ற பன்ச் சூப்பர். க்ளைமாக்ஸ் எதிர்பாராத ட்விஸ்ட்.
முன்னோடி… அனுபவமில்லாத இயக்குநர்களுக்கு டைரக்டர் குமார் முன்னோடிதான்
Tags:
Munnodi Director SPTA Kumar, Munnodi Escape Artist Madan, Munnodi movie, Munnodi posters, Munnodi Stlls, Munnodi The Role Model, அர்ஜீனா, சித்தாரா, பாவெல், முன்னோடி இயக்குநர், முன்னோடி கலைஞர்கள், முன்னோடி தலைவர்கள், முன்னோடி திரை விமர்சனம், முன்னோடி படம் எப்படி, முன்னோடி யார், முன்னோடி விமர்சனம், யாமினி பாஸ்கர், ஷிஜாய் வர்கீஸ், ஹரிஷ்
0 comments:
Post a Comment