நடிகர்கள் : நட்ராஜ் (நட்டி), ருஹி சிங், அதுல் குல்கர்னி, ‘முண்டாசுபட்டி’ ராம்தாஸ், அர்ஜுன், ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், மனிஷா, ‘பாவா’ லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் மற்றும் பலர்.
இயக்கம் : தாஜ்
இசை : ஸ்ரீ என்ற ஸ்ரீகாந்த் தேவா (பாடல்கள் மட்டும்)
ஒளிப்பதிவாளர் : மகேஷ் முத்துசாமி,
எடிட்டர்: கோபிகிருஷ்ணா
சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர்
நடனம் – கல்யாண், பாப்பி,
பி.ஆர்.ஓ. : மௌனம் ரவி
தயாரிப்பு : ராஜரத்தினம், ஸ்ரீதரன்
கதைக்களம்…
ஆந்திராவில் உள்ள காஸ்ட்லி கார் நிறுவனத்தில் நட்டி நடராஜ், ரூஹி சிங், அர்ஜுனன் ஆகியோர் வேலை செய்கின்றனர்.
இவர்கள் பணி புரியும் கம்பெனியில் இருந்து Rolls-Royce (ரோல்ஸ் ராய்ஸ்) காரை வாங்கி தன் மகளுக்கு பரிசளிக்க விரும்புகிறார் ஒரு அமைச்சர்.
நட்ராஜ், அர்ஜுனன் இருவரும் காரை டெலிவரி செய்ய செல்லும்போது, சிலர் இவர்களை அடித்துவிட்டு, அந்த காரை கடத்திச் செல்கின்றனர்.
இதனால் திருட்டு பழி இவர்கள் மீது விழ, வேலையை விட்டு நீக்கப்படுகின்றனர்.
இதனால் எங்கு சென்றாலும் வேலையில்லாமல் தவிக்கும் இவர்கள், கார் திருடும் பணியை மேற்கொள்கின்றனர்.
இதனால் நிறைய பணம் கிடைக்கிறது. ஒரு சூழ்நிலையில் இவர்களால் ஏமாற்றப்பட்ட முனிஸ்காந்தும் இவர்களுடன் இணைகிறார்.
ஒரு முறை மதுரை தாதாவான சரத் லோகித்ஸ்வாவிடம் உள்ள 10 சொகுசு கார்களை திருட இவர்களுக்கு ஆர்டர் வருகிறது.
அதற்கான ப்ளானில் இவர் ஈடுப்படும்போது, இவர்கள் பறிகொடுத்த Rolls-Royce (ரோல்ஸ் ராய்ஸ்) கார் ஒரு இடத்தில் இருப்பதும், அதன் பின் நடந்த ஒரு கொலையும் தெரிய வர, மிகப்பெரிய திட்டம் போடுகிறார் நட்டி.
அந்த திட்டம் என்ன? தாதாவை வென்று காரை அட்டைய போட்டாரா? இவர்கள் மீது சுமத்தப்பட்ட திருட்டு பட்டம் போனதா? என்பதே இந்த போங்கு.
கேரக்டர்கள்…
தனக்கு மிகவும் பரிச்சயமான ‘சதுரங்க வேட்டை’ கதைதான் என்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார் நட்டி.
நட்டியின் ஸ்டைலிஷ் லுக், படபட பேச்சு, அள்ளும் ஆக்ஷன் இவரது நடிப்பை ரசிக்க வைக்கிறது.
அழகான காஸ்ட்லி காருடன் ரூஹி சிங்கும் அழகாக வந்து செல்கிறார். அரைகுறை ஆடைகளில் கிக் ஏற்றுகிறார்.
படம் முழுக்க வரும் கேரக்டரில் அர்ஜுனன். நிறைவான கேரக்டர்.
முண்டாசுப்பட்டி முனிஸ்காந்த் அவருடைய ஸ்டைலில் சிரிக்க வைக்கிறார்.
காமெடி நடிகர் சாம்ஸ்க்கு சில காட்சிகள்தான். ஆனால், அதிலும் சிரிக்க வைத்து கிக்ஸர் அடிக்கிறார்.
சரத் லோகித்ஸ்வா தன்னுடைய மிரட்டல் பாணியை இதிலும் சிறப்பாக செய்துள்ளார்.
ஸ்பெஷல் போலீஸாக அதுல் குல்கர்னி. நேர்த்தியான நடிப்பு. மயில்சாமி வந்து போகிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
மகேஷ் முத்துச்சாமியின் ஒளிப்பதிவில் சேசிங் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
போங்கு போங்கு பாடல் படு ஸ்பீட். மற்ற பாடல்கள் தேவையா? என்னுமளவுக்கு படத்தின் வேகத்தை குறைக்கிறது.
பின்னணி இசையே கூடுதல் பலத்தை கொடுக்கிறது.
காரை திருடும்போது, சிசிடிவி கேமராவை லாக் செய்வது, போன்றவை லாஜிக் மீறலாக உள்ளது.
கார் திருடும் கதையை வேகமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் தாஜ். ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் காரை திருடும் திட்டம் பயங்கரமாக உள்ளது.
ஆனால் எப்படி திருடினார்கள் என்பதை வாம்மா மின்னல் என்ற ரகத்தில் சொல்லி முடித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
‘போங்கு’… நட்டிக்கு ஏற்ற ‘நச்’ ஸ்டோரி
0 comments:
Post a Comment