மகேஷ்பாபுவின் ஸ்பைடர் டீசரை பாராட்டிய ராஜமவுலி
02 ஜூன், 2017 - 12:39 IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ஸ்பைடர். ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்தில் மகேஷ் பாபுவுடன் ராகுல்பிரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர், மகேஷ்பாபு ரசிகர்களால் சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை வெளியானது. அதோடு, டீசர் வெளியாகி சில மணி நேரங்களில் அஜித்தின் வேதாளம் டீசரின் யூடியூப் சாதனையை முறியடித்தது.
அந்த அளவுக்கு மகேஷ்பாபுவின் ரசிகர்கள் ஸ்பைடர் டீசருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர். மகேஷ்பாபு புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தின் டீசரில் தோன்றிய கிராபிக்ஸ் ரோபோ ஸ்பைடரை உருவாக்க மட்டுமே ரூ.30 லட்சம் செலவு செய்திருக்கிறார்கள். மேலும், ஸ்பைடர் படத்தின் டீசரை பல சினிமா பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில், பாகுபலி டைரக்டர் ராஜமவுலியும் தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார். அதோடு, படத்திற்கு எதற்காக ஸ்பைடர் என்று வைத்திருக்கிறீர்கள் என்பது டீசரிலேயே தெரிந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment