ரஜினியின் காலாவில் அம்பேத்கராக நடிக்கும் மம்முட்டி.?
02 ஜூன், 2017 - 15:09 IST
பா.ரஞ்சித் டைரக்சனில் ரஜினி நடிக்கும் 'காலா' படம் பற்றி தினம் ஒரு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. ரஜினி கம்பீரமாக அமர்ந்திருக்கும் மஹிந்திரா ஜீப்பின் பதிவெண்ணில் இருக்கும் BR என்பது அம்பேத்கரை குறிப்பதாகவும் 1956 என்பது அவர் இறந்த வருடத்தை குறிக்கும் விதமாகவும் ஒரு காரணமாகத்தான் வைத்துள்ளாராம் ரஞ்சித். மேலும் அம்பேத்கர் பற்றிய விஷயங்கள் இந்தப்படத்தில் இடம்பெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவலை நேற்றே சொல்லியிருந்தோம்.
இப்போது இன்னும் ஒரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் மலையாள சினிமாவின் மெகாஸ்டார் மம்முட்டி நடிக்க இருக்கிறார் என்றும், அதிலும் குறிப்பாக டாக்டர் அம்பேத்கராக நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.. ஏற்கனவே அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று படத்தில் அம்பேத்கராக நடித்தவர்தான் மம்முட்டி. அதனாலேயே மம்முட்டியை இந்தப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன் மம்முட்டி நடித்த 'கம்மத் அண்ட் கம்மத்' என்கிற மலையாள படத்தில் தனுஷ் சில நிமிடங்கள் மட்டுமே வந்துபோகும் கெஸ்ட் ரோலில் நட்புக்காக நடித்துக்கொடுத்தார். அந்த உரிமையில், தற்போது தான் தயாரிக்கும் படத்திலும் சில காட்சிகளில் மம்முட்டி கெஸ்ட் ரோலில் நடிக்கவேண்டும் என தனுஷ் கோரிக்கை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஒருவேளை மம்முட்டி இப்படத்தில் ஒப்புக்கொண்டு நடித்தால் 'தளபதி'க்கு பிறகு 26 வருடங்கள் கழித்து ரஜினியும் மம்முட்டியும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..
0 comments:
Post a Comment