'சாவித்ரி' கதாபாத்திரம், குண்டாக மறுத்த கீர்த்தி சுரேஷ்
02 ஜூன், 2017 - 17:11 IST
'பாகுபலி 2' படத்திற்காக குண்டாக இருந்த அனுஷ்காவை ஒல்லியாகவும், அழகாகவும் மாற்ற மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் வரை செலவு செய்தார்கள். 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக நிஜமாகவே குண்டான அனுஷ்காவால் அதன் பின் உடம்பை இளைக்க வைக்க முடியவேயில்லை. யோகா டீச்சராக இருந்தவருக்கே அந்த நிலைமை என்றால் கீர்த்தி சுரேஷ் நிலைமை என்னவாகும்..?.
சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தமிழ், தெலுங்கில் படமாக்க ஆரம்பித்துவிட்டார்கள். சாவித்திரி ஒல்லியாக இருக்க மாட்டார். கொஞ்சம் குண்டாக இருப்பார். அதனால், கீர்த்தி சுரேஷையும் கொஞ்சம் குண்டாக மாறும்படி சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவருடைய தோழிகளும், நலம் விரும்பிகளும் அந்தத் தப்பை மட்டும் செய்யாதே என்று சொல்லிவிட்டார்களாம். அப்புறம் அனுஷ்காவின் நிலைமைதான் உனக்கும் என்று அவரை எச்சரித்திருக்கிறார்கள்.
அதனால், படக்குழுவிடம் தன்னால் குண்டாக முடியாது என்று கீர்த்தி சொல்லிவிட்டாராம். இதனால், கீர்த்தி சுரேஷை கிராபிக்ஸ் மூலம் குண்டாக மாற்றலாமா என யோசித்து வருகிறார்களாம். வளர்ந்து வரும் நேரத்தில் ரிஸ்க் எடுக்க கீர்த்தி மறுப்பதும் நியாயம்தான் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
0 comments:
Post a Comment