பரபரப்பை ஏற்படுத்திய 'தங்கல்' நடிகையின் புகைப்படம்
08 ஜூன், 2017 - 11:19 IST
அமீர்கான் நடித்த 'தங்கல்' திரைப்படத்தில் அவருடைய மூத்த மகளாக நடித்தவர் ஃபாத்திமா சனா ஷேக். படத்தில் அவருடைய நடிப்பை அனைவருமே பாராட்டினர். ஃபாத்திமா தற்போது ஓய்விற்காக மாலத் தீவு சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரையில் அவர் எடுத்த புகைப்படங்களில் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அதற்கு பலரும் பலவிதமான கமெண்ட்டுகளைக் கூறி வருகின்றனர். குறிப்பாக ரம்ஜான் மாதத்தில் இப்படி ஒரு புகைப்படத்தை எப்படி வெளியிடுவீர்கள் என அவரைக் கேள்வி கேட்டு வருகின்றனர்.
ஃபாத்திமா வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படங்கள் அப்படி ஒன்றும் கிளாமரான புகைப்படங்களாகத் தெரியவில்லை. ஒரு பக்கம் அந்தப் புகைப்படங்களுக்கு எதிர்ப்பு இருந்தாலும், அவர் எந்த ஆடை அணிவது என்பது அவருடைய சுதந்திரம், அதில் யாரும் தலையிட முடியாது என்ற கருத்துக்களும் கமெண்ட்டுகளில் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்த விமர்சனங்கள் குறித்து ஃபாத்திமா இதுவரை எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை.
0 comments:
Post a Comment