Thursday, June 8, 2017

‘ஆண் தேவதை’ படத்தில் கவிக்கோவின் முதல் சினிமா பாடல்


samuthirakani aan dhevadhaiஓரிரு தினங்களுக்கு முன், உடல்நலக்குறைவால் கவிக்கோ அப்துல்ரகுமான் காலமானார் என்பதை பார்த்தோம்.


இவர் மிகப்பெரிய கவிஞராக வலம் வந்தாலும், இதுவரை தமிழ் சினிமாவிற்கு ஒரு பாடல் கூட எழுதியது இல்லை.

இளையராஜா, ஏஆர். ரஹ்மான் பலமுறை பாடல் எழுத கேட்டும் அவர் சம்மதிக்கவில்லையாம்.

இந்நிலையில் அவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு கிடைத்துள்ளது.

கவிக்கோ மறைவுக்கு முன்னர் அவரை சந்தித்த ஜிப்ரான், நீங்கள் பாடல் எழுத வேண்டாம். இதற்கு முன்பு எழுதிய பாடலை கொடுங்கள். நான் இசையமைத்து கொள்கிறேன் என்று சொன்னாராம்.

அதன்படி அவர் கொடுக்க, விரைவில் வெளிவரவுள்ள ‘ஆண்தேவதை’ படத்தில் அந்த பாட்டை பயன்படுத்த போகிறாராம் ஜிப்ரான்.

தாமிரா இயக்கிவரும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அந்தப் பாடல் வரிகள் இதோ…

மலரின் நறுமணம் போகுமிடம்

குழலின் பாடல்கள் போகுமிடம்

அணைந்த சுடர்கள் போகுமிடம்

அதுதான் நாமும் போகுமிடம்

மலரின் நறுமணம் போகுமிடம்

குழலின் பாடல்கள் போகுமிடம்

அணைந்த சுடர்கள் போகுமிடம்

அதுதான் நாமும் போகுமிடம்

போகுமிடம் நாம் போகுமிடம் நாம்

போகுமிடம் நாம் போகுமிடம்

போகுமிடம் நாம் போகுமிடம் நாம்

போகுமிடம் நாம் போகுமிடம்

மாதா கோயில் ஜெப ஒலி

பள்ளிவாசல் அழைப்பொலி

இந்து ஆலய மணி ஒலி

எல்லாம் ஒன்றாய் போகுமிடம்

மாதா கோயில் ஜெப ஒலி

பள்ளிவாசல் அழைப்பொலி

இந்து ஆலய மணி ஒலி

எல்லாம் ஒன்றாய் போகுமிடம்

போகுமிடம் நாம் போகுமிடம் நாம்

போகுமிடம் நாம் போகுமிடம்

போகுமிடம் நாம் போகுமிடம் நாம்

போகுமிடம் நாம் போகுமிடம்

அந்த இடம் நம் சொந்த இடம்

அணைத்து பொருளும் வந்த இடம்

அங்கே மதங்கள் ஏதுமில்லை

அமைதிக்கென்றும் சேதமில்லை

அந்த இடம் நம் சொந்த இடம்

அணைத்து பொருளும் வந்த இடம்

அங்கே மதங்கள் ஏதுமில்லை

அமைதிக்கென்றும் சேதமில்லை

மதுவும் வண்டும் வேறில்லை

கண்ணீர் புன்னகை வேறில்லை

அதுவும் இதுவும் வேறில்லை

அனைத்தும் ஒன்றே உண்மையிலே

போகுமிடம் நாம் போகுமிடம் நாம்

போகுமிடம் நாம் போகுமிடம்

போகுமிடம் நாம் போகுமிடம் நாம்

போகுமிடம் நாம் போகுமிடம்



0 comments:

Post a Comment