'விஜபி 2 டீசர்', அனிருத் மிஸ்ஸிங், ரசிகர்கள் வருத்தம்
08 ஜூன், 2017 - 10:18 IST
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைப்பில் தனுஷ், அமலா பால், கஜோல் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் 'விஐபி 2' படத்தின் டீசரை நேற்று மாலை ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் அவருடைய டிவிட்டரில் வெளியிட்டார்.
'விஐபி 2' டீசரில் தனுஷ் எந்த ஒரு வசனத்தையும் பேசவில்லை. மாறாக அவர் சண்டை மட்டுமே போடுகிறார். சமுத்திரக்கனி மட்டுமே டீசரில் வசனம் பேசுகிறார். அதுவும் வழக்கம் போல அவருடைய கருத்துப் பேச்சு அதில் இடம் பெற்றுள்ளது. மேலும் டீசரில் கஜோல் இல்லை, நாயகி அமலா பால் இல்லை. வெறும் 37 வினாடிகள் மட்டுமே டீசர் உள்ளது. இது தனுஷ் ரசிகர்களுக்குத் திருப்திகரமாக இல்லை.
அதோடு, டீசரின் பின்னணி இசையைப் பற்றி யுடியூபில் பலரும் கமெண்ட்டுகளைப் பதிவிட்டுள்ளனர். அதில் பலர் படத்திற்கு அனிருத் இசையமைக்காதது மிகப் பெரும் குறை எனக் கூறியுள்ளனர். 'விஐபி' படத்தின் முதல் பாகத்தில் அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்குப் பக்கபலமாக அமைந்தது.
அனிருத் - தனுஷ் கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக வலம் வந்தது. ஆனால் இப்படத்தில் அவருக்குப் பதிலாக ஷான் ரோல்டனை தன் படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார். அவர் இயக்கிய 'ப பாண்டி' படத்திற்கு ஷான் ரோல்டன்தான் இசையமைத்தார். அதைத் தொடர்ந்து 'விஐபி 2' படத்திற்கும் இசையமைக்கிறார்.
ஒரு டீசருக்கே தனுஷ் ரசிகர்கள், அனிருத் மிஸ்ஸிங் என குறை சொல்லும் போது படம் வந்தால் இன்னும் என்னவெல்லாம் சொல்வார்களோ...?.
0 comments:
Post a Comment