சமுத்திரகனி படத்திற்காக பிரமோஷன் பாடல் தயாராகிறது!
08 ஜூன், 2017 - 09:28 IST
தொண்டன் படத்தை இயக்கி, நடித்த சமுத்திரகனி, தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் காலா படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மும்பையில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்து நடித்து விட்டு சென்னை திரும்பியிருக்கிறார். மேலும், காலா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு, தாமிரா இயக்கத்தில் தான் நடித்து வந்த ஆண்தேவதை படத்தில் தனக்கான டப்பிங்கை பேசிக்கொடுத்து விட்டு மும்பை சென்றார் சமுத்திரகனி.
தற்போது, அந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஜூலையில் படம் வெளியாகிறது. இந்த நிலையில், அப்படத்தை விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு பிரமோஷன் பாடலுக்கு இசையமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இந்த பிரமோஷன் பாடலில் விரைவில் நடிக்கிறார் சமுத்திரகனி. அந்த பாடலை சேனல்கள், இணையதளங்களில் வெளியிட்டு பப்ளிசிட்டியை பரபரப்பாக தொடங்கப்போகிறார்களாம்.
0 comments:
Post a Comment