Saturday, June 3, 2017

த்ரிஷா தோழியானார் சங்கீதா


த்ரிஷா தோழியானார் சங்கீதா



03 ஜூன், 2017 - 10:48 IST






எழுத்தின் அளவு:








மியூசிக் சேனலின் நட்சத்திர தொகுப்பாளினி சங்கீதா. தற்போது செந்தமிழ் பெண்ணே, 24 பிரேம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். 24 பிரேம் நிகழ்ச்சியில் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குனர்கள் பங்கேற்பதால் பலரும் சங்கீதாவை சினிமாவில் நடிக்க அழைத்திருக்கிறார்கள். ஆனால் சங்கீதாவின் குடும்பத்தினர் சினிமாவில் நடிக்க சம்மதிக்கவில்லையாம்.

இப்போது கொஞ்சம் இறங்கி வந்து ஹீரோயினாக, மற்றவர்களுக்கு ஜோடியாக நடிக்காமல் ஹீரோயின் தோழியாக, ஹீரோவின் தங்கையாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்களாம். தோழி வாய்ப்பு தேடலின் பலனாக அடுத்து த்ரிஷா நடிக்கும் படம் ஒன்றில் அவரின் தோழியாக நடிக்கிறார். படம் முழுக்க அவருடன் வருகிற மாதிரியான கேரக்டர். அடுத்து காஜல் அகர்வால், சமந்தா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மாதிரியான முன்னணி ஹீரோயின்களின் தோழியாக நடிக்க முயற்சிக்கிறார் சங்கீதா.


0 comments:

Post a Comment