டிடிஎச்சில் படம் வெளியீடு முடிவுஎடுக்கப்பட வில்லை:விஷால்
02 ஜூலை, 2017 - 20:32 IST
டிடிஎச்சில் படம் வெளியிடுவது குறித்து எந்த முடிவையும் எடுக்கப்பட வில்லை என திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறினார் சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
திரைத்துறை திரைப்பட உரிமையாளர்களுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி என்பது சுமை தான்.திங்கள் கிழமை முதல் காட்சிகள் ரத்து என்ற முடிவு வருத்தம் அளிக்கிறது. திரையரங்கு உரிமையாளர்களிடம் போராட்டத்தை ஒத்தி வைக்க கோரிக்கை விடுத்து இருந்தோம் . கேளிக்கை வரியில் இருந்து தமிழக அரசு விலக்கும் என நம்புகிறோம் அளிக்க கோரிக்கை விடுத்துள்ளோம். அரசின் முடிவிற்காக காத்திருக்கிறோம்.
தயாரிப்பாளர்களை கலந்து ஆலோசிக்காமல் திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்போராட்ட முடிவை அறிவித்துள்ளனர். திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு பதிலாக மாற்று வழியை யோசித்திருக்கலாம். பெரிய நடிகர்களின் படம் ஓடிக்கொண்டிருந்தால் இது போன்ற முடிவுகளை எடுத்திருக்க மாட்டார்கள்.திரையரங்கு உரிமையாளர்கள் இன்று இரவு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment