காமெடி ஷோவுக்கு நடுவராகிறார் அக்ஷை குமார்
02 ஜூலை, 2017 - 16:12 IST
காமெடி ஷோ ஒன்றிற்கு நடிகர் அக்ஷை குமார் நடுவராக போவதாக முன்னர் கூறப்பட்டது. தற்போது காமெடி ஷோவுக்கு அவர் நடுவராக வர போவது உறுதியாகி உள்ளது.
தி கிரேட் இந்தியன் லாப்டர் சேலஞ்ச் என்ற காமெடி ஷோவின் 5வது சீசன் நிகழ்ச்சிக்கு அக்ஷை குமார் வர போகிறாராம். அதிரடி ஆக்ஷன் ஹீரோவான அக்ஷை குமார், காமெடியன்களை ஜட்ஜ் செய்ய உள்ளதை பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். காமெடியன்களை ஜட்ஜ் செய்வதுடன், அவர்களின் காமெடி பற்றி அக்ஷை குமார் தனது விமர்சனங்களையும் தெரிவிக்க உள்ளார்.
தற்போது அக்ஷை குமார், டாய்லெட் ஏக் பிரேம் கதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீசாக உள்ளது.
0 comments:
Post a Comment