Monday, July 3, 2017

லஞ்சம், ஊழல் : ஆடியோ விழாவில் அதிரடி பேச்சு


லஞ்சம், ஊழல் : ஆடியோ விழாவில் அதிரடி பேச்சு



03 ஜூலை, 2017 - 17:24 IST






எழுத்தின் அளவு:






Mansoor-Ali-Khan-claims-that-huge-bribes-demanded-for-giving-clearance-to-films


'கோலிசோடா', 'பசங்க' முதலான படங்களில் நடித்த கிஷோர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'உறுதிகொள்'. 'நெடுஞ்சாலை' படத்தை இயக்கிய கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணிபுரிந்த ஆர்.அய்யனார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மேனகா நடிக்கிறார்.

அறிமுக இசை அமைப்பாளர் ஜூட் லெனிகர் இசை அமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றபோது, ஜி.எஸ்.டி.வரியால் சினிமா பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும், தமிழில் பெயர் வைத்து வரிவிலக்கு பெறுவதற்காக அந்த துறையை சார்ந்த மந்திரிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை குறித்தும் மேடையில் பரபரப்பாக பேசினார் மனசூரலிகான்.

அதுமட்டுமல்ல, “அதாகப்பட்டது மகாஜனங்களே படத்திற்கு 4.50 லட்சம், வனமகன் படத்திற்கு 15 லட்சம், காற்று வெளியிடை படத்திற்கு 50 லட்சம், சிங்கம்3 படத்துக்கு 60 லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிக் கொண்டு தான் கேளிக்கை வரி விலக்கு அளித்தார் சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர்” என்றும் போட்டுத்தாக்கினார்.

மன்சூரலிகானின் அதிர பேச்சினால் 'உறுதிகொள்' ஆடியோ விழா கொஞ்சம் பரபரப்பானது.


0 comments:

Post a Comment