கங்கனா படத்தில் இணைந்த அங்கிதா லோக்காந்தே
03 ஜூலை, 2017 - 15:11 IST
வானம் படத்தை இயக்கிய கிரிஷ், இப்போது பாலிவுட்டில் கங்கனா ரணாவத்தை கொண்டு மணிகர்னிகா என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் ஜான்சி ராணி ரோலில் கங்கனா நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகை அங்கிதா லோக்காந்தேவும் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அங்கிதா கூறியிருப்பதாவது... "கங்கனா படத்தில் நானும் நடிக்கிறேன். ஜகல்காரிபாய் என்ற ரோலில் நான் நடிக்கிறேன். அவரைப்பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. இருந்தாலும் இந்த நாட்டில் பெருமைக்குரியவர் அவர். அவருடைய வேடத்தில் நடிப்பதை நானும் பெருமையாக கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.
மணிகர்னிகா படத்தை கமல் ஜெயின் மற்றும் ஜீ ஸ்டியோஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். அடுத்தாண்டு ஏப்., 27-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.
0 comments:
Post a Comment