மகன் படத்தை தயாரிக்கும் அப்பா
10 ஜூலை, 2017 - 14:20 IST
பாலிவுட்டின் பிரபல நடிகர் அனில் கபூரின் வாரிசுகளில், மகள் சோனம் கபூர், முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மகன் ஹர்சவர்த்தன் கபூர், மிர்சியா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ஹர்சவர்த்தன், அடுத்தப்படியாக ஒலிம்பிக்கில், துப்பாக்கி சுடும் பிரிவில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார். கண்ணன் அய்யர் இயக்கும் இப்படத்தை கிரிராஜ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்போது இந்த நிறுவனத்தோடு, நடிகர் அனில் கபூரும் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார். முதன்முறையாக மகனின் படத்தை அனில் கபூர் தயாரிக்கிறார். அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது, அடுத்தாண்டு படம் ரிலீஸாக உள்ளது.
0 comments:
Post a Comment