“ஆப்பிள் மெழுகுவர்த்தி' : காளிதாஸ் ஜெயராமுக்கு ரசிகர் ஐடியா..!
10 ஜூலை, 2017 - 17:34 IST
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் தற்போது மலையாளத்தில் 'பூமரம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஆப்பிள் பழம் பற்றிய தனது அனுபவத்தை ஒரு வீடியோவாக பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் ஷூட்டிங் ஸ்பாட் அருகில் இருந்த பழக்கடைக்கு சென்ற ஜெயராம் சாப்பிடுவதற்காக ஆப்பிள் வாங்கியுள்ளார். அதன் பளபளப்புக்காக பூசப்பட்டிருந்த மெழுகு பூச்சு அவரை அதிர்ச்சியடைய வைத்ததாம்.
உடனே அந்த ஆப்பிளை வாங்கிய காளிதாஸ் ஜெயராம், அந்த ஆப்பிளின் மீதுள்ள மெழுகை சுரண்டி, அதை வீடியோவாக மாற்றி தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். கூடவே இதைத்தவிர நாம் என்ன செய்துவிட முடியும்..?” என ஆதங்கத்துடன் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர், பேசாமல் நீங்கள் இதை மெழுகுவர்த்தியாக பயன்படுத்தலாமே என கிண்டலாக யோசனை கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment