சஞ்சய் தத் வாழ்க்கை படம் ரிலீஸ் எப்போது?
04 ஜூலை, 2017 - 13:09 IST
பாலிவுட்டின் பிரபல நடிகரான சஞ்சய் தத் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய் தத் ரோலில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். சஞ்சய்யின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மும்முரமாய் நடந்து வருகிறது. சஞ்சய் தத் படம் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையின் போது சல்மான் படத்துடன் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை இயக்குநர் ராஜ்குமார் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது... "2018, ரம்ஜானில் சஞ்சய் தத் படம் ரிலீஸாவதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. நாங்கள் நினைத்த படி படம் முடிந்தால் 2018, மார்ச் 30-ல் படம் ரிலீஸாகும்" என்றார்.
0 comments:
Post a Comment