Monday, July 10, 2017

மெர்சலுக்கு போட்டியாக ஸ்கெட்ச்?


மெர்சலுக்கு போட்டியாக ஸ்கெட்ச்?



11 ஜூலை, 2017 - 10:20 IST






எழுத்தின் அளவு:






Mersal---Sketch-may-be-in-Diwali-race


'கலைப்புலி' எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வாலு பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில், விக்ரம், தமன்னா நடிக்கும் படம் 'ஸ்கெட்ச்'. 'ஸ்கெட்ச்' படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டநிலையில், இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் 'ஸ்கெட்ச்' படத்தின் டீஸரை மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதிரடி ஆக்ஷன் படமாக ஸ்கெட்ச் உருவாகி வரும் ஸ்கெட்ச் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார்கள்.

விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படமும் தீபாவளி ரிலீசாக வெளிவரவிருக்கிறது. விஜய்யிடம் கால்ஷீட் கேட்டு காத்திருக்கும் தாணு, நிச்சயமாக விஜய் படத்துக்கு போட்டியாக ஸ்கெட்ஸ் படத்தை வெளியிட மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஒருவேளை அப்படி ரிலீஸாகவில்லை என்றால் ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


0 comments:

Post a Comment