Monday, July 10, 2017

ரஜினி சென்னை திரும்பினார்: நாளை முதல் காலா படப்பிடிப்பில் பங்கேற்பு


ரஜினி சென்னை திரும்பினார்: நாளை முதல் காலா படப்பிடிப்பில் பங்கேற்பு



11 ஜூலை, 2017 - 10:40 IST






எழுத்தின் அளவு:






Rajini-return-from-US


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.ஓ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தற்போது காலா படத்தில் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடந்தது. இதில் இரண்டு கட்டமாக கலந்து கொண்டு ரஜினி நடித்தார். கடந்த மாதம் 22ந் தேதி மும்பை சென்ற ரஜினி, 5 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு 27ந் தேதி மும்பையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அங்கு தான் ஏற்கெனவே சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். பின்னர் அங்கு சில நாட்கள் ஓய்வில் இருந்த ரஜினி நேற்று சென்னை திரும்பினார். அமெரிக்காவிலிருந்து துபாய் வந்து அங்கிருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார்.
ரஜினி வருவதை கேள்விப்பட்ட பத்திரிகையாளர்கள் விமான நிலையத்தில் அவருக்காக காத்திருந்தனர். ஆனால் விமானத்திலிருந்து இறங்கிய ரஜினி பத்திரிகையாளர்களின் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் வேகமாக தன் காரில் ஏறி சென்று விட்டார். இதனால் பத்திரிகையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இன்று ஒரு நாள் வீட்டில் முழு ஓய்வெடுக்கும் ரஜினி, நாளை முதல் சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் மும்பை தாராவி செட்டில் காலா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.


0 comments:

Post a Comment