Monday, July 3, 2017

பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆருக்காக ஹீரோ வாய்ப்பை விட்டுக் கொடுத்த டி.எஸ்.பாலையா


பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆருக்காக ஹீரோ வாய்ப்பை விட்டுக் கொடுத்த டி.எஸ்.பாலையா



03 ஜூலை, 2017 - 11:45 IST






எழுத்தின் அளவு:






TS-balaiah-give-opportunity-to-MGR-as-hero


1948ம் ஆண்டு வெளிவந்த படம் மோகினி. ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவர் டி.எஸ்.பாலையா. அப்போது குணசித்ரம் மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்த டி.எஸ்.பாலையாவுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு.

இரண்டாவது நாயகனாக எம்.ஜி.ஆர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர் அப்போது வளர்ந்து வரும் நடிகர். மோகினியில் தான் ஹீரோவாக நடித்தால் தன் எதிர்காலத்துக்கு நல்லதாக அமையும் என்று எம்.ஜி.ஆர்., நினைத்தார். அவர் ஜூபிடர் பிலிம் அதிபர் எம்.சோமசுந்தரத்தை அணுகி தன்னை ஹீரோவாக போடும்படி கேட்டார் அதற்கு அவர் "பாலையாவை முடிவு செய்துவிட்டோம். அவர் சம்மதித்தால் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்" என்றார்.

அன்றே டி.எஸ்.பாலையாவை சந்தித்த எம்.ஜி.ஆர்., தன் ஆசையை கூறினார். "நான் இதில் ஹீரோவாக நடித்தாலும் அடுத்து என்னை வில்லனுக்குத்தான் கூப்பிடுவார்கள். நீ வளர வேண்டிய பையன் நீயே ஹீரோவாக நடித்துக் கொள்" என்று கூறி பாலையா இரண்டாவது நாயகனாக நடித்தார். அவருக்கு ஜோடியாக மாதுரி தேவி நடித்தார். எம்.ஜி.ஆர் ஜோடியாக வி.என்.ஜானகி நடித்தார். லங்கா சத்யம் இயக்கிய இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. தனக்கு டி.எஸ்.பாலய்யா செய்த உதவிக்காக பல கட்டங்களில் எம்.ஜி.ஆர், அவருக்கு உதவி செய்து வந்தார்.


0 comments:

Post a Comment