Monday, July 3, 2017

நான் இளமையாக உணர்கிறேன் - ஆனந்தராஜ்


நான் இளமையாக உணர்கிறேன் - ஆனந்தராஜ்



03 ஜூலை, 2017 - 12:16 IST






எழுத்தின் அளவு:






I-am-feeling-young-says-Anandaraj


ஒரு காலத்தில் மிரட்டல் வில்லனாக வலம் வந்து கொண்டிருந்தவர் ஆனந்தராஜ். சமீபகாலமாக காமெடி கலந்த வேடங்களில் நடித்து வருகிறார். முண்டாசுப் பட்டி, நானும் ரெளடிதான், பாயும்புலி, மரகதநாணயம் போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு இப்போது பிசியான நடிகராகி விட்டார். தற்போது விக்ரம் பிரபு நடித்து வரும் பக்கா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிக்க முதல்நாள் ஸ்பாட்டிற்கு சென்றபோது, ஆனந்தராஜ் தனது தந்தையுடன் நடித்தவர் என்பதால், அவரை அங்கிள் என்று உரிமையோடு அழைத்தாராம் விக்ரம் பிரபு. ஆனால் அவர் அப்படி அழைப்பதைப்பார்த்த பட நாயகி நிக்கி கல்ராணியும் அவரை அங்கிள் என்று அழைக்கத் தொடங்கி விட்டாராம். அதையடுத்து மரகதநாணயம் படத்தில் நடிக்கும்போதும் அப்படியே அழைத்தாராம்.

இதுபற்றி ஆனந்தராஜ் கூறுகையில், நான் 30 ஆண்டுகால நடிகர். என்றபோதும், இப்போது என்னை சீனியர் என்று நான் நினைத்துக் கொள்வதே இல்லை. புதுவரவு நடிகனாகவே நினைத்துக்கொள்கிறேன். இளவட்ட நடிகர் நடிகைகள் என்னை ஓரங்கட்டக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளங்களில் அவர்களுக்கு இணையாக ஜாலியாக பழகி வருகிறேன்.

அவர்கள் என்னை கலாய்த்தால் நானும் பதிலுக்கு கலாய்க்கிறேன். இதனால் நானும் இளமையாக உணர்கிறேன். என்றாலும், என் வயதை கருத்தில் கொண்டு என்னை அங்கிள் என்று இளவட்டங்கள் சொல்வதை தவிர்க்க முடியவில்லை. நான் வில்லனாக நடித்து வந்த காலத்தில் நடிகைகள் என்னிடம் பேசவே பயப்படுவார்கள். ஆனால் இப்போது நிக்கி கல்ராணி உள்ளிட்ட சிலர் என்னை அங்கிள் என்று அன்போடு அழைக்கிறார்கள். அது மனதுக்கு சந்தோசமாகவே உள்ளது என்கிறார் ஆனந்தராஜ்.


0 comments:

Post a Comment