Saturday, December 3, 2016

100 கோடி கிளப்பில் 'டியர் ஜிந்தகி'


100 கோடி கிளப்பில் 'டியர் ஜிந்தகி'



04 டிச,2016 - 08:44 IST






எழுத்தின் அளவு:








ஷாரூக்கான், ஆலியா பட் நடிப்பில் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தை இயக்கிய கௌரி ஷிண்டே இயக்கத்தில் வெளிவந்த 'டியர் ஜிந்தகி' படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாயை வசூலித்து 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி வெளிவந்த இந்தப் படம் 10 நாட்களுக்குள் இந்த சாதனையைப் புரிந்திருக்கிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பொதுவாக, ஷாரூக்கான நடிக்கும் படங்கள் என்றாலே மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும். ஆனால், 'டியர் ஜிந்தகி' படம் சுமார் 25 கோடி ரூபாய் செலவில் மட்டுமே உருவான படம். இதில் கண்டிப்பாக ஷாரூக்கானின் சம்பளத்தைச் சேர்க்க முடியாது. ஏனென்றால் படத்தின் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர்தான். கௌரி ஷிண்டே இதற்கு முன் இயக்கிய 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படமும் சுமார் 75 கோடி வரை வசூல் செய்த படமாக இருந்தது.

மனித உறவுகளை மையப்படுத்திய கதைகளாக தனது இரண்டு படங்களைக் கொடுத்த பெண் இயக்குனரான கௌரி ஷிண்டே, ஷாரூக்கை நாயகனாக நடிக்க வைத்து இப்படி ஒரு வரவேற்பைப் பெற்றதற்கு பாலிவுட் ரசிகர்களால் பாராட்டப்படுகிறார்.


0 comments:

Post a Comment