Saturday, December 3, 2016

வேலையில்லாப் பட்டதாரி 2: முக்கிய வேடத்தில் கஜோல்?


201612031249439252_kajol-to-be-a-part-of-dhanushs-vellailla-pattadhaari-2_secvpfதனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் ‘வேலையில்லாப் பட்டதாரி’. படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கப்போவதாக தனுஷ் கடந்த மாதம் அறிவித்தார்.


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் ‘வேலையில்லாப் பட்டதாரி-2’ வை தனுஷின் மைத்துனி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க அனிருத், ஷான் ரோல்டன் இருவரும் இசையமைக்கிறார்கள்.


இந்நிலையில் பாலிவுட் நடிகை கஜோல் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாகவும், இதற்காக அவருக்கு 4 கோடிரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் கஜோல் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழில் கடைசியாக 19 வருடங்களுக்கு முன் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் கஜோல் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment