Saturday, December 3, 2016

இறுதி கட்டத்தை நெருங்குகிறது ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்: 11ந் தேதி இறுதி போட்டி


இறுதி கட்டத்தை நெருங்குகிறது ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்: 11ந் தேதி இறுதி போட்டி



03 டிச,2016 - 14:59 IST






எழுத்தின் அளவு:








ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சியான ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி இறுதி கடத்தை நெருங்கி வருகிறது. சிறுவர், சிறுமிகளின் நடிப்புத் திறமையை வெளிக்குகொண்டு வரும் நிகழ்ச்சி இது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆடிசன் நடித்தி திறமையான சிறுவர்களை கண்டுபிடித்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

இதன் இறுதி சுற்றுபோட்டிகள் இன்று கோவை இந்துஸ்தான் கல்லூரியில் உள்ள அரங்கில் நடக்கிறது. இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று தங்கள் நடிப்பாற்றலை வெளிப்படுத்த இருக்கிறார்கள். நடுவர்களாக பணியாற்றும் குஷ்பு, அர்ச்சனா, கே.பாக்யராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு ஜூனியர் சூப்பர் ஸ்டாரை தேர்வு செய்கிறார்கள். இறுதி போட்டிகள் வருகிற 11ந் தேதி ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகிறது. ஜூனியர் சூப்பர்ஸ் ஸ்டாராக தேர்வாகிறவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க இருக்கிறார்.


0 comments:

Post a Comment