குத்துப்பாட்டுக்கு நோ சொன்ன அஞ்சலி!
03 டிச,2016 - 10:29 IST
இறைவி படம் தனது மார்க்கெட்டை மறுபடியும் உயர்த்தும் என்று ரொம்பவே எதிர்பார்த்தார் அஞ்சலி. ஆனால் அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனபோதும் அதன்பிறகு தன்னை தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகம் செய்த ராம் இயக்கத்தில் தரமணி, பேரன்பு படங்களில் கமிட்டானவர், காண்பது பொய் என்ற படத்தில் கதையின் நாயகியாகவும் நடித்து வந்தார். ஆனால் இப்போது அந்த படங்களின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இந்நிலையில், இப்போது ஜெய்யுடன் நடித்து வரும் பலூன், எனக்கு வாய்த்த அடிமைகள் படங்களை மட்டுமே அவர் எதிர்பார்த்திருக்கிறார். இதில், எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் கெஸ்ட் ரோலில்தான் நடித்துள்ளார். மேலும், சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் குத்துப்பாட்டுக்கு நடனமாடியபடி தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்ததை மனதில் கொண்டு சில டைரக்டர்கள் அஞ்சலியை பாட்டுக்கு நடனமாடி அழைத்தபோது மறுத்து விட்டாராம். குத்தாட்ட நடிகையாகி ஹீரோயினி இமேஜை கெடுத்துக்கொள்ள மாட்டேன் என்று தடாலடியாக பதிலுரைத்து விட்டாராம்.
0 comments:
Post a Comment