Friday, December 9, 2016

2016 வசூலில் நான்காம் இடத்தை பிடித்த 'புலி முருகன்'..!


2016 வசூலில் நான்காம் இடத்தை பிடித்த 'புலி முருகன்'..!



09 டிச,2016 - 17:25 IST






எழுத்தின் அளவு:








நூறுகோடி வசூலை தாண்டிய முதல் மலையாள படம் என ஒவ்வொரு மலையாள ரசிகனையும் காலரை தூக்கிவிட்டுக்கொள்ள ஒரு வாய்ப்பளித்த 'புலி முருகன்' படத்தின் சீரான ஓட்டம் இன்னும் நிற்கவே இல்லை. தற்போதைய நிலவரப்படி இந்தப்படத்தின் வசூல் ரூபாய் 130 கோடியை எட்டியுள்ளது என்கிறார்கள் கேரள வினியோகஸ்தர்கள். அந்தவகையில், இந்த வருடத்தில் தென்னிந்திய மொழிகளில் வெளியான படங்களில் அதிகபட்சம் வசூலை ஈட்டிய படங்களில் நான்காவது இடத்தை 'புலி முருகன்' பிடித்துள்ள்ளது.

இதற்கு முன் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படம் சுமார் 350 கோடி ரூபாய் வசூலை ஈட்டி முதல் இடத்திலும், விஜய்யின் 'தெறி' படம் 175 கோடி வசூலுடன் இரண்டாவது இடத்திலும், ஜூனியர் என்.டி.ஆரும் மோகன்லாலும் இணைந்து நடித்த 'ஜனதா கேரேஜ்' 135 கோடி வசூலித்து மூன்றாவது இடத்திலும் இருந்தன.. அல்லு அர்ஜுனின் 'சர்ரொனைடு' படம் 127 கோடி வசூலித்து நான்காவது இடத்தில் இருந்தது.. ஆனால் தற்போது 130 கோடி வசூலித்து அல்லு அர்ஜுனை பின்னுக்கு தள்ளிவிட்டு நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது 'புலி முருகன்'.. இனி வரும் நாட்களில் 'ஜனதா கேரேஜ்' படத்தின் வசூல் சாதனையையும் இந்தப்படம் முறியடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments:

Post a Comment