Friday, December 9, 2016

மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்த பிருத்விராஜ்..!


மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்த பிருத்விராஜ்..!



09 டிச,2016 - 17:36 IST






எழுத்தின் அளவு:








மலையாள சினிமாவில் இமேஜ் பற்றி கவலைப்படாத நடிகர் என்றால் நிச்சயமாக அது பிருத்விராஜாகத்தான் இருக்க முடியும்.. அவர் நடித்த மும்பை போலீஸ் படத்தில் அவர் ஏற்று நடித்த கேரக்டரே அதற்கு சாட்சி. அப்படிப்பட்ட கேரக்டரிலேயே (அது சஸ்பென்ஸ்.. படம் பார்க்காதவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்) நடித்துவிட்டவருக்கு வில்லன் வேடம் என்றால் மாட்டேன் என்றா சொல்லப்போகிறார்..? அதுவும் ஏற்கனவே 'கனாக்கண்டேன்', 'ராவணன்', 'கிருத்யம்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்து பாராட்டு பெற்றவர் தானே.. அதனால் இப்போது மீண்டும் ஒருமுறை வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார் பிருத்விராஜ்..

ஆனால் இது தமிழிலோ அல்லது மலையாளத்திலோ அல்ல.. இந்தியில்.. ஆம்.. கடந்த வருடம் பாலிவுட்டில் அக்சய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் 'பேபி'. நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. ஆனால் இதன் தொடர் பாகத்தை உருவாக்குவதற்கு முன்பாக, இதன் ப்ரீக்வல் எனப்படும் முன்கதையைத்தான் இரண்டாம் பாகமாக உருவாக்குகிறார்கள்.. படத்தின் பெயர் 'நாம் சபானா'.. இந்த இரண்டாம் பாகத்தில் தான் பிருத்விராஜும் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அது வில்லன் கேரக்டர் என்பது இப்போது உறுதியாகி உள்ளது. அய்யா, ஔரங்கசீப் ஆகிய படங்களை தொடர்ந்து இந்தியில் இவர் நடிக்கும் மூன்றாவது படமாகும் இது.


0 comments:

Post a Comment