திரையுலகினரை வியக்க வைத்த நிதின் சத்யா
09 டிச,2016 - 16:42 IST
சென்னை 28 உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார் நடிகர் நிதின்சத்யா. அதற்குள் சொந்தமாக படம் தயாரிக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டார். அவருடைய அம்மா லட்சுமி, ஒரு காலத்தில் நடிகர் கரணுக்கு மானேஜராக இருந்தவர். கொஞ்சம் வளர்ந்த பிறகு லட்சுமியை உதாசீனப்படுத்த ஆரம்பித்தார் கரண். அதனால் கடுப்பான லட்சுமி, தன் மகன் அருணை கதாநாயகனாக்க முடிவெடுத்தார். அவரது மகன் அருண்தான் பின்னர் நிதின் சத்யா என்று பெயரை மாற்றிக்கொண்டு நடிகரானார்.
சென்னை28 படத்துக்கு பிறகு ஒரு சில படங்களில் தனி ஹீரோவாக நடித்தார். அந்தப் படங்கள் ப்ளாப்பானதை அடுத்து சில வருடங்கள் படமில்லாமல் இருந்தார். இந்நிலையில்தான் தற்போது சொந்தப்படம் தயாரிக்கிறார் நிதின் சத்யா. அது மட்டுமல்ல, சென்னை 28 இரண்டாவது இன்னிங்கஸ் படத்தின் லண்டன் வெளியீட்டு உரிமையை தன்னுடைய ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட் சார்பில் நிதின் சத்யா வாங்கியிருக்கிறார். சில படங்களில் நடித்த நிதின் சத்யா தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் மாறி இருப்பது திரையுலகினரை வியக்க வைத்துள்ளது.
0 comments:
Post a Comment