Thursday, December 8, 2016

25 நாட்களில் அறம் படத்தை முடித்துக் கொடுத்த நயன்தாரா


25 நாட்களில் அறம் படத்தை முடித்துக் கொடுத்த நயன்தாரா



09 டிச,2016 - 09:58 IST






எழுத்தின் அளவு:








விஜய் நடித்த கத்தி படத்தின் கதை என்னுடையது என்று சர்ச்சையைக் கிளப்பிய மீஞ்சூர் கோபி தற்போது தன்னுடைய பெயரை கோபி நயினார் என்று மாற்றிக்கொண்டு அறம் என்ற படத்தை இயக்கி வருகிறார். கத்தி படத்தின் இன்னொரு வெர்ஷன் என்பது போன்ற கதை அம்சம் கொண்ட 'அறம்' படத்தில் நயன்தாரா கலெக்டராக கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்காக 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் நயன்தாரா. அதன்படி இந்தப்படத்திற்காக நயன்தாரா கொடுத்த தேதிகளில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார் கோபி நயினார்.! 'அறம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து நயன்தாரா தற்போது 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.

'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக பெங்களூரில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த செய்தியை அறிந்ததும், உடனே படப்பிடிப்புக்கு பிரேக் விட்டு சென்னை வந்து தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் உடன் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் பெங்களூர் திரும்பியுள்ளார் நயன்தாரா!

அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யாப் ஆகியோரும் நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தை 'டிமாண்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். அறம் படத்தைப் போலவே இமைக்கா நொடிகள் படத்திலும் கௌரவ வேடத்தில்தான் நடிக்கிறார் நயன்தாரா!


0 comments:

Post a Comment