Saturday, December 17, 2016

4-ம் தலைமுறை காதல் கதையில் 4 ஜி ! -டைரக்டர் வெங்கட் பாக்கர்


4-ம் தலைமுறை காதல் கதையில் 4 ஜி ! -டைரக்டர் வெங்கட் பாக்கர்



17 டிச,2016 - 12:04 IST






எழுத்தின் அளவு:








கடவுள் இருக்கான் குமாரு படத்தை அடுத்து புரூஸ்லி, அடங்காதே, 4 ஜி, சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் இசையமைத்து நாயகனாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். இதில் 4 ஜி படத்தை சி.வி.குமார் தயாரிக்க, டைரக்டர் ஷங்கரின் உதவியாளர் வெங்கட் பாக்கர் இயக்குகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 2-ந்தேதி முதல் தொடங்குகிறது.

இப்படம் குறித்து இயக்குனர் வெங்கட் பாக்கர் கூறுகையில், 4 ஜி படம் நான்காம் தலைமுறையின் காதலை சொல்லும் படம். இதில் ஜி.வி.பிரகாஷ், ஸ்டைலிஷான ஹீரோவாக நடிக்கிறார். இதற்கு முன்பு அவர் நடித்த படங்களில் தாடி கெட்டப்பில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் அந்த மாதிரியில்லாமல், அவரை முழுமையாக மாற்றியிருக்கிறேன். அவரது காஸ்டியூம்களும் புதுமையாக இருக்கும். முக்கியமாக ரொம்ப யூத்தாக இருப்பார்.

இப்படத்தில் புதியமுகம் சுரேஷ்மேனன் ஒரு புதுமையான கேரக்டரில் நடிக்கிறார். சதீஷ் காமெடியனாக நடிக்க, காயத்ரி சுரேஷ் என்றொரு மலையாள நடிகை அறிமுகமாகிறார். இவர் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். 4 ஜி படத்தை கோடைமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்கிறார் வெங்கட் பாக்கர்.


0 comments:

Post a Comment