Saturday, December 17, 2016

பிப்ரவரி 5-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்


பிப்ரவரி 5-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்



17 டிச,2016 - 10:52 IST






எழுத்தின் அளவு:








தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி 25ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெற்றது. தலைவராக எஸ்.தாணுவும், பொதுச்செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகியோரும், துணைத் தலைவர்களாக பைவ் ஸ்டார் கதிரேசன், பி.எல்.தேனப்பன் ஆகியோரும், பொருளாளராக சத்யஜோதி தியாகராஜனும் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்கள்.

இவர்களின் பதவிக் காலம் வருகிற ஜனவரி 25ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய தேர்தல் நடத்துவது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு நேற்று கூடி விவாதித்தது. இதில் வருகிற பிப்ரவரி 5ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தலை நடத்துவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

கடந்த தேர்தலை போன்றே இந்த முறையும் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை தேர்தல் பார்வையாளராக கொண்டு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் 3 ஆயித்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருந்தாலும் சுமார் 1200 உறுப்பினர்களே வாக்களிக்கத் தகுதியானவர்கள்.

இந்த தேர்தலில் விஷால் ஒரு அணி அமைத்து போட்டியிடுகிறார். அவர் நடிகர் சங்கத் தலைவராக இருப்பதால் தலைவர் பதவிக்கு அவரது அணியில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜ் போட்டியிடுவார் என்று தெரிகிறது. விஷால் துணை தலைவருக்கு போட்டியிடலாம். இது தவிர ஜே.கே.ரித்தீஷ், ராதாரவி, சரத்குமார் இணைந்து ஒரு அணி அமைத்து போட்டியிட இருக்கிறார்கள். கலைப்புலி தாணு அணியும் மீண்டும் களத்தில் குதிக்கலாம். இந்த தேர்தலும் பரபரப்பு நிறைந்ததாகவே இருக்கும் என்று தெரிகிறது.


0 comments:

Post a Comment