சஞ்சய் தத்திற்காக காத்திருக்கும் ரன்பீர்
17 டிச,2016 - 15:45 IST
சஞ்சய் தத்தின் ஆஸ்தான இயக்குநரும், நெருங்கிய நண்பருமான ராஜ்குமார் ஹிரானி, அடுத்தப்படியாக சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் சஞ்சய்யாக, ரன்பீர் நடிக்கிறார். மான்யா ரோலில் அனுஷ்கா சர்மா நடிக்கிறார். இதன்படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் தற்போது ரன்பீர், சஞ்சய் போன்ற குணாதிசயங்களை பெற பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சஞ்சய் தத்திடம், அவரது ரோலில் ரன்பீர் நடிப்பது பற்றி கேட்டபோது, சஞ்சய் பதிலளித்தாவது... ‛‛என் வாழ்க்கையை ராஜ்குமார் ஹிரானி போன்றவர்கள் இயக்குவதால் அனைவரும் ரசிப்பார்கள் என நினைக்கிறேன். எனது ரோலில் ரன்பீர் நடிக்கிறார். தினமும் ரன்பீர் எனக்கு போன் செய்து உங்களை பார்த்து பேச வேண்டும், ஒருவாரம் அல்லது ஒருநாளாவது உங்களுடன் இருந்து உங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் என்னால் ஒரு அரைமணி நேரம் கூட அவருக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. எனது ரோலில் நடிப்பது சற்று வித்தியாசமான ஒன்று தான், இருந்தாலும் ரன்பீர் திறமையான நடிகர், சிறப்பாக நடிப்பார் என நம்புகிறேன்''.
இவ்வாறு சஞ்சய் தத் கூறுகிறார்.
0 comments:
Post a Comment