Saturday, December 3, 2016

தல தளபதியை காலி பண்ணுறேன் – கங்கணம் கட்டிய முன்னணி இயக்குனர்


தல நடிகருக்கு அந்த பட்டத்தை வழங்கியதே அந்த இயக்குநர்தான். அதேபோல் தடுமாறிக்கொண்டிருந்த தளபதிக்கு மெகா ஹிட்களை கொடுத்து நூறு கோடி கிளப்பில் சேர்த்ததும் அதே இயக்குநர்தான்.



Advertisement



ஆனால் அந்தோ பரிதாபம்… அவருக்கே இருவரும் கால்ஷீட் இல்லை என்று மறுக்க தெலுங்கு ப்ரின்ஸை இப்போது இயக்கிக் கொண்டிருக்கிறார். இரண்டு ஹீரோக்களுமே தன்னிடம் கதை கேட்கவே மறுத்ததால் இருவரையும் விட ப்ரின்ஸை பெரிய ஹீரோவாக்க இரவு பகலாக உழைக்கிறாராம்.


படம் தமிழில் பெரிய ஹிட் அடிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் ரசிகர்கள் விரும்பும் அம்சங்களை அதிகமாக படத்தில் சேர்த்துவருகிறார். இயக்குநர் மனதில் அடுத்தும் ஒரு தெலுங்கு ஹீரோவை தமிழில் களம் இறக்கும் எண்ணம் இருக்கிறது என்கிறார்கள்.


படம் ரிலீஸ் ஆகட்டுமே, யாரு யார காலி பண்ணுறாங்கன்னு பாத்துருவோம் என்கிறார்களாம் கோலிவுட் பிரபலங்கள்.


English summary : Mega hit director joined with Telugu prince actor to teach a lesson to Thala and Thalapathi actors who have refused call sheets to the director.





















0 comments:

Post a Comment