தனது வாழ்க்கை படம் : சஞ்சய் தத் கவலை
02 டிச,2016 - 12:25 IST
பாலிவுட்டின் பிரபல நடிகரான சஞ்சய் தத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாக இருக்கிறது. சஞ்சய்யின் நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி தான் இந்தப்படத்தை இயக்க உள்ளார். இதில் சஞ்சய்யின் ரோலில் ரன்பீர் கபூர் நடிக்க உள்ளார். அடுத்தாண்டு முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் ரன்பீர் தனது ரோலில் நடிப்பது சஞ்சய் தத்திற்கு அவ்வளவாக உடன்பாடில்லையாம். சமீபத்தில் ரன்பீரும், ராஜ்குமாரும், சஞ்சய் தத்தை அவரது இல்லத்தில் சந்தித்து இப்படம் தொடர்பாக பேசினர். அப்போது சஞ்சய் தத்திற்கு ரன்பீர் ரோல் திருப்தியாக அமையவில்லையாம். ஏனென்றால் ரன்பீர், ஆக்ஷ்ன் காட்சிகளில் எல்லாம் அவ்வளவாக நடித்தது கிடையாது, அதனால் கொஞ்சம் யோசிக்கிறாராம் சஞ்சய்.
0 comments:
Post a Comment