Friday, December 2, 2016

தமிழ் திரைப்பட நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு


தமிழ் திரைப்பட நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு



02 டிச,2016 - 16:13 IST






எழுத்தின் அளவு:








தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழ் திரைப்பட நூற்றாண்டு விழா இன்றும், நாளையும் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் உருவான புயல் சின்னம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழாக்குழு தலைவர் நடிகை ரோகினி, செயலாளர் சி.அன்பரசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரைப்பட நூற்றாண்டுவிழா டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் நடப்பதாக இருந்தது. இந்த சூழ்நிலையில் நடா புயல் உருவாகி சென்னை மற்றும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் பங்கேற்காமல் விழாவை நடத்துவது யாருக்கும் பயன்தராது என்பதோடு விழாவும் சிறப்பாக இருக்காது. எனவே விழா ஒத்தி வைக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில திங்களுக்குள் விழாவை எந்த தேதியில் நடத்துவது என்பது பற்றி அறிவிப்போம். தொடர்ந்து ரசிகர்களும், ஊடகங்களும் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment