நாகேஷ் திரையரங்கம் ஜனரஞ்சகமான படம்! -சொல்கிறார் ஆரி
11 டிச,2016 - 08:44 IST
ரெட்டைச்சுழி, நெடுஞ்சாலை, மாயா, உன்னோடு கா உள்பட பல படங்களில் நடித்தவர் ஆரி. தற்போது நாகேஷ் திரையரங்கம், கடை எண் 6 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்கள் பற்றி ஆரி கூறுகையில், நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்களை திருப்திபடுத்தக்கூடிய கமர்சியல் விசயங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். அந்த வகையில், தற்போது நடித்துக்கொண்டிருக்கும் நாகேஷ் திரையரங்கம் படத்தைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஒரு அருமையான படம். காதல், காமெடி, செண்டிமென்ட் கலந்த கதை. முகமது இசாக் இயக்கி வரும் இந்த படத்தில் என்னுடன் ஆஷ்னா சாவேரி, காளி வெங்கட், லதா, சித்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
மேலும், நாகேஷ் திரையரங்கம் என்பதுதான் இந்த படத்தின் கதைக்களமாக உள்ளது. ஹீரோ பெயர் நாகேஷ். மற்றபடி நாகேஷ் தியேட்ட ருக்கும், நடிகர் நாகேஷ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதோடு, இன்றைய இளவட்ட ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து ஜனரஞ்சகமான விசயங்களையும் உள்ளடக்கிய இந்த படம், என்னை கமர்சியல் ஹீரோ பட்டியலில் இடம்பெறச்செய்து, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் படமாக கண்டிப்பாக இருக்கும் என்கிறார் ஆரி.
0 comments:
Post a Comment