Saturday, December 10, 2016

ரஜினி படத்தில் சிரஞ்சீவி?


ரஜினி படத்தில் சிரஞ்சீவி?



11 டிச,2016 - 09:49 IST






எழுத்தின் அளவு:








சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 2.ஓ. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தில் இந்தி நடிகர் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. 2017ம் ஆண்டு தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் வியாபாரத்திற்கு தமிழில் ரஜினி, இந்தியில் அக்சய்குமார் இருக்க, தெலுங்கு வியாபாரத்திற்கு அங்குள்ள யாரேனும் ஒரு பிரபல நடிகர் நடித்தால் உதவியாக இருக்கும் என்று இப்போது 2.ஓ படத்தில் சிரஞ்சீவியை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கும் முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், சிரஞ்சீவி தெலுங்கு சூப்பர் ஸ்டாராக இருந்த காலத்திலேயே, தமிழ் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினி நடித்த ராணுவ வீரன், மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஆக, சிரஞ்சீவி மீண்டும் ரஜினியுடன் நடித்தால் அவர்கள் இருவரும் இணையும் மூன்றாவது படம் 2.ஓ ஆகி விடும்.


0 comments:

Post a Comment