Friday, December 23, 2016

பலே வெள்ளையத் தேவா விமர்சனம்

நடிகர்கள் : சசிகுமார், தன்யா, கோவை சரளா, சங்கிலி முருகன், பாலாசிங், ரோகிணி, வளவன் மற்றும் பலர்.
இயக்கம் : சோலை பிரகாஷ்
இசை : தர்புகா சிவா
ஒளிப்பதிவாளர் : ரவீந்திரநாத் குரு
எடிட்டிங்: பிரவீன் ஆண்டனி
பி.ஆர்.ஓ.: நிகில்
தயாரிப்பாளர் : கம்பெனி புரொடக்சன்ஸ் – சசிகுமார்


கதைக்களம்…


போஸ்ட் மாஸ்டர் ரோகினியின் மகன் சசிகுமார். இவர் அந்த ஊரில் மட்டன் கடை வைத்திருக்கும் பாலா சிங்கின் மகள் தன்யாவை காதலிக்கிறார்.


இவர்களின் காதலுக்கு அந்த ஊர் செல்ஃபி காத்தாயி கோவை சரளா மற்றும் சங்கிலி முருகன் உதவுகின்றனர்.


இடையில் அந்த ஊர் கேபிள் ஓனர் வளவனை பகைத்துக் கொள்கிறார் சசி.


வில்லனால் ஏற்படும் பிரச்சினைகளால் சசி எப்படி சமாளித்து, காதலியை கரம் பிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.
Bale Vellaiya Theva movie review rating


கதாபாத்திரங்கள்…


சசிகுமார் வழக்கமான கிராமத்து கதையில் ஜொலிக்கிறார். இதில் பெண்னை தன் பின்னால் சுற்ற விடாமல் இவர் சுற்றி வருவது ஓகே.


ஆனால் அதற்கான மொக்கை ஐடியாவை கேட்டுக் கொண்டு பள்ளி முட்டை, எச்சில் என்பதெல்லாம் என்னத்த சொல்வது?


நாயகி தனிக்கொடியாக வரும் தன்யாவுக்கு இதான் முதல் படம். அழகாய் அம்சமாய் வந்து செல்கிறார். சீரியஸ் காட்சிகள் இல்லை என்பதால் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.


படத்தின் மெயின் கேரக்டர் கோவை சரளாதான். செல்ஃபி எடுத்துக் கொண்டு சந்தோஷம் சொல்லும்போது கலக்குகிறார்.


தன்னை ஒருவன் மலடி என்று சொல்லிவிட்டானே என்று அழும்போது நடிப்பில் சபாஷ் சொல்ல வைக்கிறார் சரளா.


சங்கிலி முருகன் ஜொள்ளும் திருட்டு விசிடியுமாய் ரகளை செய்கிறார்.


இவர்களுடன் ரோகினி, பாலா சிங், வளவன் ஆகிய நல்ல நடிகர்கள் இருந்தும் திரைக்கதையில் வலுவில்லை.


தொழில்நுட்ப கலைஞர்கள்…


படத்திற்கு பெரிய ஆறுதல் ஒளிப்பதிவு.


ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகை கொண்டு வந்தாலும் சில காட்சிகளில் அதுவும் செயற்கையாக இருக்கிறது.


தர்புகா சிவா இசையில் பாடல்கள் ஜஸ்ட் லைக் தட்.


ஒரு திறமையான இயக்குனர் நடிகர் சசியை வைத்து என்னவெல்லாமே செய்திருக்கலாம். ஆனால் சோலை பிரகாஷ் நமக்கு சோகத்தையே ஏற்படுத்துகிறார்.


க்ளைமாக்ஸ், சசியின் கேபிள் செட்டாப் பாக்ஸ் பிசினஸ், ஊர் தண்டாரோ உள்ளிட்ட என்று பெரும்பாலான காட்சிகள் நம்பும்படியாக இல்லை.


கிராமத்து கதை என்பதால் மட்டும் இக்கதையை சசி இதை தேர்தெடுத்தாரா? எனத் தெரியவில்லை. என்னாச்சு சசி சார்?


பலே வெள்ளையத் தேவா… வெள்ளையத் தேவா மட்டுமே. பலே கட்.

0 comments:

Post a Comment