Friday, December 23, 2016

ரயீஸ் படத்திற்கு சிக்கல் வருகிறது...! - வழக்கு தொடர தாதா மகன் முடிவு









ரயீஸ் படத்திற்கு சிக்கல் வருகிறது...! - வழக்கு தொடர தாதா மகன் முடிவு



23 டிச,2016 - 11:34 IST






எழுத்தின் அளவு:








ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛ரயீஸ். ராகுல் தொலாக்கியா இயக்கியுள்ள இப்படத்தில் ஷாரூக்கான், கள்ளச்சாரய தாதா நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக பாகிஸ்தான் நடிகை மகிரா கான் நடிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு ஜன., 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதனிடையே ரயீஸ் படத்தின் கதை, பிரபல கள்ளச்சாரய வியாபாரி அப்துல் லதீப்பின் வாழ்க்கை கதை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே அவரது மகன் முஷ்டாக், என்னிடம் எந்த அனுமதியும் பெறாமல் எனது தந்தையின் வாழ்க்கையை படமாக எடுத்துள்ளார்கள் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிபதிகள் படத்தை பார்த்துவிட்டு அதன்பின்னர் எதிர்ப்பு தெரிவியுங்கள் என்று அறிவுறுத்தினார்கள்.

இந்நிலையில், ‛ரயீஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் அதை பார்த்த அப்துல் லதீப்பின் மகன் முஷ்டாக், உறுதியாக ரயீஸ் படத்திற்கு எதிராக வழக்கு தொடர முடிவெடுத்திருக்கிறார். இதுப்பற்றி முஷ்டாக் கூறியிருப்பதாவது... ‛‛ரயீஸ் படத்தின் டிரைலரை பார்த்தேன், கண்டிப்பாக இது எனது தந்தையின் கதை தான். படக்குழு என்ன சொன்னால் அதைப்பற்றி நான் கவலைப்படப்போவது கிடையாது. நிச்சயம் நான் ரயீஸ் படத்திற்கு எதிராக வழக்கு தொடருவேன் என்று கூறியுள்ளார்.




Advertisement








ரசிகர்களை எண்ணி பயப்படும் அமீர்கான்ரசிகர்களை எண்ணி பயப்படும் அமீர்கான் ஜன., முதல் முபர்கான் படப்பிடிப்பில் பங்கேற்கும் அனில் கபூர் ஜன., முதல் முபர்கான் படப்பிடிப்பில் ...






0 comments:

Post a Comment