Friday, December 2, 2016

மீண்டும் வெள்ளித்திரையில் டிடி : தனுஷ் படத்தில் நடிக்கிறார்









மீண்டும் வெள்ளித்திரையில் டிடி : தனுஷ் படத்தில் நடிக்கிறார்



02 டிச,2016 - 15:42 IST






எழுத்தின் அளவு:








சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்தவகையில் சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த், ரோபோ சங்கர் போன்றவர்கள் வரிசையில் அடுத்தப்படியாக களம் இறங்க உள்ளார் டிடி என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி, ஏற்கனவே நள தமயந்தி, விசில் உள்ளிட்ட சில படங்களில் தலைகாட்டி உள்ளார். ஆனால் வெள்ளித்திரையில் அவருக்கு கிடைக்காத பெயர் புகழ் சின்னத்திரையில் கிடைத்ததால் தொடர்ந்து சின்னத்திரையிலேயே பயணித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் வெள்ளித்திரைக்கு பயணமாகிறார் டிடி. தனுஷ் இயக்கத்தில், ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் ‛பவர் பாண்டி' படத்தில் ஒரு முக்கியமான ரோலில் டிடி.,யும் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க அவர் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




Advertisement








மீண்டும் ரஹ்மானின் ‛டேக் இட் ஈஸி', ஆனால் கண்டிஷன் அப்ளை!மீண்டும் ரஹ்மானின் ‛டேக் இட் ஈஸி', ... பிசியானார் அபி சரவணன் பிசியானார் அபி சரவணன்






0 comments:

Post a Comment