
இந்நிலையில் பொங்கல் ரிலீசாக இப்படத்தை வெளியிடப்போவதாக படக்குழு நேற்று அறிவித்திருக்கிறது. இதுதவிர அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘குற்றம் 23’, கிருஷ்ணாவின் ‘யாக்கை’, கலையரசனின் ‘அதே கண்கள்’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ ஆகிய படங்களும் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.
விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பைரவா’ பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் மேலும் 5 படங்கள் வெளியாவது சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியிருக்கிறது.
எனினும் டிக்கெட் முன்பதிவு மற்றும் தியேட்டர்களைப் பொறுத்தவரையில் விஜய்யின் ‘பைரவா’வுக்கே முன்னுரிமை கிடைக்கும் என்பதால் இந்த போட்டியிலிருந்து ஒருசில படங்கள் கடைசி நேரத்தில் பின்வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment