Sunday, December 18, 2016

இந்தி படத்தில் ஐஸ்வர்யா ராஜேசின் முத்த காட்சிகள் நீக்கம்


இந்தி படத்தில் ஐஸ்வர்யா ராஜேசின் முத்த காட்சிகள் நீக்கம்



18 டிச,2016 - 14:38 IST






எழுத்தின் அளவு:








அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி காக்கா முட்டை படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா இந்தியில் நடித்து வரும் படம் டாடி. இது பிரபல மும்பை தாதா அருண் காவ்லியின் வாழ்க்கை கதை. தாவூத் இப்ராஹிமுக்கு அடுத்த தாதாவா இவரை கூறுகிறார்கள். இவர்மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. தற்போது சிறையில் இருக்கிறார்.

அருண் காவ்லி தாதாவா இருந்தாலும் தன் மனைவி சுபைதா முஜாவர் மீது அதிகமான காதல் கொண்டிருந்தார். முஸ்லிமான சுபைதா இந்துவாக மாறி பெயரையும் ஆஷா என்று மாற்றிக் கொண்டார். அவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கிறர்கள். இந்த காதல் கதைதான் படத்தின் பிரதான களம். இதில் அருண் காவ்லியாக அர்ஜுன்ராம்பால் நடிக்கிறார். அவர மனைவி ஆஷாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

படத்தின் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதும் அருண் காவ்லியின் மகள்கள் கீதா, அஷ்மிதா, யோகிதா ஆகியோருக்கு போட்டுக் காட்ட வேண்டும். படம் முடிந்ததும் முழு படத்தையும் அருண் காவ்லிக்கு போட்டுக் காட்ட வேண்டும் அவர் ஒகே சொன்னால் மட்டும்தான் வெளியிட வேண்டும் என்பது நிபந்தனை. சில தினங்களுக்கு முன்பு அருண் காவ்லிக்கும், ஆஷாவுக்குமான காதல் காட்சிகளை இந்தி படங்களுக்கே உரிய பாணியில் படமாக்கி இருந்தனர். அர்ஜுன்ராம்பாலும், ஐஸ்வர்யா ராஜேசும் படுக்கை அறை காட்சியில் நெருக்கமாக நடித்திருந்தனர். இந்த காட்சிகளுக்கு அருண்காவ்லியின் மகள்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தனை நெருக்கம் வேண்டாம் மென்மையான காதல் காட்சிகளாக மாற்றுங்கள் என்று அவர்கள் கூறியதை தொடர்ந்து எடுக்கப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு இப்போது புதிதாக காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.


0 comments:

Post a Comment